உலகின் சிறந்த நகரங்களின் தரவரிசை 2025; முதலிடம் பிடித்த லண்டன்!
உலகின் மிகச்சிறந்த நகரங்களின் தரவரிசையில் லண்டன் தொடர்ந்து 10வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.
உலகின் சிறந்த நகரங்கள் 2025 பட்டியலை ரெசோனான்ஸ் கன்சல்டென்சி(Resonance Consultancy) மற்றும் இப்சோஸ்(Ipsos) இணைந்து வெளியிட்டன.
முதலிடத்தை 10வது ஆண்டாக லண்டன் பிடித்த நிலையில், நியூயார்க் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த கருத்துக் கணிப்பானது, 31 நாடுகளில் 22,000 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்புகளில் , பெரிய நகரங்களில் வாழ்வதற்கான உலகளாவிய ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த நகரங்களின் இந்த பட்டியல், சுற்றுலா தளங்களை மட்டும் பார்க்காமல், 3 முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்கிறது.
அவற்றில் இயற்கை சூழல், கட்டமைப்பு வசதிகள் அத்துடன் கலாச்சாரம், உணவு மற்றும் இரவு வாழ்க்கை ஆகிய கணக்கில் கொள்ளப்பட்டன.
மேலும் நகரத்தின் மனித மூலதனம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு கிடைக்கும் ஆதரவு ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதலிடம் பிடித்த லண்டன் நகரம் உண்மையான சிறந்த நகரமாக இருக்க வேண்டிய அளவுகோலை தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது என்று லண்டன் & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் CEO லாரா சிட்ரான் தெரிவித்துள்ளார்.
இந்திய நகரங்கள் இடம் பெறவில்லை
உலகின் மிகச்சிறந்த நகரங்களின் தரவரிசை 2025ல் இந்திய நகரங்கள் எதுவும் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.
உலகின் சிறந்த 10 நகரங்கள் 2025
- லண்டன் (யுகே)
- நியூயார்க் (யு.எஸ்.ஏ)
- பாரிஸ் (பிரான்ஸ்)
- டோக்கியோ (ஜப்பான்)
- சிங்கப்பூர்
- ரோம் (இத்தாலி)
- மாட்ரிட் (ஸ்பெயின்)
- பார்சிலோனா (ஸ்பெயின்)
- பெர்லின் (ஜெர்மனி)
- சிட்னி (ஆஸ்திரேலியா)