கூகுள் அறிமுகப்படுத்தும் “டைம் டிராவல்”
கூகுள், அதன் செயற்கைக்கோள் படத் தளமான கூகுள் எர்த்தில்(Google Earth) சில புதிய புதுப்பிப்புகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய அம்சம் கூகுள் எர்த்தில் பயனர்கள், 80 ஆண்டுகளுக்கு முந்தைய செயற்கைக்கோள் மற்றும் வான்வழிப் படங்களைப் பார்க்க அனுமதிக்கும்.
தற்போது, கூகுள் எர்த் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான இடங்களின் படங்களைப் பார்க்க பயனர்களை அனுமதிக்கிறது.
புதிய புதுப்பித்தலின் மூலம் லண்டன், பெர்லின், வார்சா மற்றும் பாரிஸ் போன்ற சில நகரங்கள் 1930 களில் உள்ள படங்களை பார்வையிடுவதற்கு கூகுள் அனுமதிக்கும்.
இதன் மூலம் கூகுள் எர்த் பயனர்கள் காலப்போக்கில் பின்னோக்கி பயணித்து அந்த வரலாற்று புகைப்படங்களை தற்போதைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.
குறிப்பாக 1938 இன் சான் பிரான்சிஸ்கோவை 2024 உடன் ஒப்பிட்டு, அப்பகுதியின் புவியியல் எவ்வளவு மாறிவிட்டது என்பதைப் பார்ப்பதற்கு கூகுள் ஒரு எடுத்துக்காட்டினை வழங்கியுள்ளது.
கூகிள் வழங்கிய மாதிரி புகைப்படங்களில், 1938 இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள துறைமுகங்கள் எவ்வாறு முக்கியமாக கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டன என்பதைக் காணலாம்.
சமீபத்திய புகைப்படங்களில் அதே இடம் உணவகங்கள் மற்றும் பயணக் கப்பல்களால் நிரம்பியுள்ளதையும் காட்டுகின்றது.
கூகுளின் டெவலப்பர் வலைப்பதிவு, இந்த புதுப்பிப்புகள் “வரவிருக்கும் வாரங்களில்” வெளியிடப்படும் என்று கூறுகிறது.
புதிய AI மொடல்களைப் பயன்படுத்தி கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப்ஸில் படத்தொகுப்பைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் நிறுவனம் படத்தின் தரத்தை மேம்படுத்தவுள்ளது.