இந்து கோவில்களை இலக்கு வைத்து தாக்குதல்: பங்களாதேஷில் மீண்டும் தலைதூக்கும் வன்முறை

பங்களாதேஷில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாசை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவரை விடுதலை செய்யக் கோரி நீதிமன்றம் முன்பாக ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டங்களை தூண்டிவிட்டமை மற்றும் தேசத்துரோக வழக்குகள் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்துக்கள் மீது குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் சட்டத்தரணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்துடன் காரணமானவர்களை கைது செய்ய 24 மணி நேர காலவகாசம் வழங்கியுள்ளனர்.

இதனிடையே சிட்டகாங்கில் போராட்டம் நடந்து வரும் நிலையில் இந்துக்களை இலக்குவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

சிட்டகாங்கின் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத்,மான்சா மாதா மற்றும் ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோவில்களின் மீதும் குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெர்விக்கின்றன.

இந்நிலையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *