மண்டபத்தையே எடுத்து கொண்டு போய் திருட்டு..
நீங்கள் சிலை திருட்டை மட்டும் கவனித்து இருப்பீர்கள். ஆனால் ஒரு மண்டபத்தையே கூட எடுத்து கொண்டு போய் இருக்கிறார்கள்.
மதுரை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கிறது மதனகோபால சுவாமி திருக்கோவில். அதிலே 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலில் கலையழகு நிறைந்த சிற்பங்கள்; உள்ளே நுழைந்ததும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வலதுபுறம் வெற்றிடமாய் இருக்கிறது. ஏன்?
அதற்கருகில் சமீபகாலத்திய சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.இதேவெட்டவெளியை முன்பு நுணுக்கமான அற்புதமான கல் மண்டபம் இருந்தது. அந்த அபூர்வம் இப்போது பிலடெல்பியாவில் இருக்கிறது
பிரிட்டிஷாரின் ஆட்சியில், மதுரை, அந்த காலத்திலேயே, வெளிநாட்டவர்களுக்கு சிலைகளின் பேர் போன இடமாக இருந்திருக்கிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போய்விட்டுச் சற்றுத் தூரத்திலிருக்கிற மதனகோபால சுவாமி கோவிலுக்கு வந்த அமெரிக்கப் பெண்மணியான அடிலைன் பெப்பா் கிப்சனுக்கு, அங்கிருந்த கல்மண்டபத்தின் புராதன அழகு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.
எப்படியாவது தங்களுடைய நாட்டிற்கு அதைக் கொண்டு போய்விட வேண்டும் என்கிற ஆசை. அவ்வளவுதான். மண்டபம் விற்கப்பட்டது.
கப்பலில் ஒரு மண்டபத்தை – 16-ம் நூற்றாண்டில் உருவான அந்தக் கல்மண்டபத்தை – தனித்தனியே ஒவ்வொரு தூணாகப் பிரித்தார்கள்.
ஒவ்வொரு தூணுக்கும் ஒரு எண் இடப்பட்டது. வரிசையாகப் பிரித்து தூண்களின் குவியலாகக் கப்பலேறி விட்டது மண்டபம். இது நடந்தது 1912-ல்.அமெரிக்காவில் அந்த எண் வரிசைப்படி தூண்களை இணைத்ததும், அங்கு மறுபடியும் மண்டபம் கட்டப்பட்டது.