பலதும் பத்தும்
உங்கள் வாழ்வில் மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட சில உண்மை
“நேரத்தின் மதிப்பு”, ஒரு 30 வயசு தாண்டும்போது, யாரு எவ்ளோ சொல்லியும் புரியாத இந்த விஷயம், தானா புரிய ஆரம்பிச்சது , “காலம் பொன் போன்றது” !!
“முடிவு எடுப்பதன் முக்கியத்துவம் ” காலம் கடந்து போன பிறகு தான் புரியுது முடிவு எடுக்கிறது எவ்ளோ முக்கியம் னு, சரியோ தவறோ ஒரு முடிவுக்கு வாங்க , காலம் தாழ்த்தறது, இதுவா அதுவான்னு யோசிச்சுட்டே இருக்கிறது, நம்பள வாழ்க்கைல எந்த பக்கமும் நகர விடாது.
“சுயகட்டுப்பாடு” இப்பலாம் சுயகட்டுப்பாடோடு இருக்கும் மனிதர்கள் தான் ஹீரோ வ தெரியறாங்க, ஏன்னா இது ஈசி இல்லிங்கோ !!
“கோபம் – ஒரு வீணான உணர்வு ” கோபம் நம்மள பல நேரங்களில் ஒரு மடையனா தான் காட்சி படுத்துது, “நன்றி உணர்ச்சி ” காலம் கடக்கும் போது தான் இல்லாத விசயங்களை விட, நமக்கு கிடைச்ச பல விசயங்கள் பத்தின புரிதலும், அதுக்கு உண்டான நன்றி உணர்வும் வருது..
“பெற்றோரின் அறிவுரை “, இதுவும் ஆரம்பத்துல கசப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கும், ஆனா இப்பலாம் பல அறிவுரைக்கு பின்னால இருக்குற யதார்த்தம் உண்மை நல்லாவே புரியுது.