வெளிநாடுச் சென்று காணாமல் போன இலங்கைப் பெண்; 29 ஆண்டுகளின் பின் மூதாட்டியாக நாடு திரும்பினார்
கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஒருவர் வயது முதிர்ந்த நிலையில், மறதியுடன் நாடு திரும்பியுள்ளார்.
மிகவும் கஷ்டத்துடன் அண்மையில் நாடு திரும்பிய அவர், விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான வெயங்கொடையில் உள்ள வீட்டிற்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலாவதி என்ற மூதாட்டியே இவ்வாறு நாடு திருமபியுள்ளார். அவர் மறதி நோயால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு அவர் சவூதி அரேபியா சென்றுள்ளார்.
அந்த வீட்டின் முதலாளிகள் எனக்கு சில மாத சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் அதன் பின்னர் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், சம்பளமும் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணியாற்றிய வீட்டில் சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு இப்போது வயதாகிவிட்டது. நான் நாடு திரும்பிய போது எனது கணவரும் இறந்து விட்டார். என் ஞாபக சிந்தனை மிகக் குறைவு என கமலாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து குறித்த பெண்ணின் மகள் கருத்து வெளியிடுகையில்,
“என் அம்மா சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்றபோது எனக்கு 11 வயது. என் சகோதரனுக்கு வயது 13. நாங்கள் அப்போது விவசாயம் செய்து வந்தோம். எனினும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
இதனால் முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக அம்மா சவூதி அரேபியா சென்றிருந்தார். அந்த வீட்டினர் அம்மாவுக்கு 2-3 மாத சம்பளம் கொடுத்தார்கள். அந்த பணத்தை அம்மா எங்களுக்கு அனுப்பி வைத்தார்.
எனினும், சில மாதங்களின் பின்னர் அம்மாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த குடியிருப்பாளர்கள் என் அம்மாவை துன்புறுத்தினார்கள், சிறிது காலத்தில் கழித்து அம்மா பற்றிய தகவலைகளை இழந்தோம்.
அதன்காரணமாக, தந்தையும் நோய்வாய்ப்பட்டு, மிகவும் ஏமாற்றமடைந்த நிலையில் சமீபத்தில் இறந்தார். என் தாயாரை சவூதி அரேபியா அனுப்பிய முகவர் நிலையத்திறகும் நான் சென்றேன்.
ஏனெனில் என்னிடம் அம்மா பற்றிய தகவல் இல்லை. அம்மாவைப் பற்றி எங்களிடம் எந்த விவரமும் இல்லை என்று சொன்னார்கள். அதன் பிறகு நாங்கள் கடுமையாக முயற்சித்தும் அம்மாவைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
எனினும், 29 ஆண்டுகள் கழித்து அம்மா நாடு திரும்பியுள்ளார்” என மகள் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வயதான இந்த தாய் தற்போது தனது மகள் மற்றும் மகனின் பராமரிப்பில் இருப்பதாகவும் அறியப்படுகிறது.