பலதும் பத்தும்
பூமியில் விழும் விண்கல்: திசைதிருப்பும் சோதனையில் விஞ்ஞானிகள் வெற்றி
நாள்தோறும் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. அதில் சில பூமியில் விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
2013ஆம் ஆண்டில் கஜகஜஸ்தான் எல்லைக்கு அருகில் செல்யாபின்ஸ்க் எனும் பகுதியில் விண்கற்கள் விழுந்தன.
இதனால் 1200க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
இதுபோன்ற நிலை இன்னொரு தரம் வந்தால் அதனை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதற்கான ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, பூமியை நோக்கி வரும் விண்கற்கள் மீது அணுக்கதிர்வீச்சை பாய்ச்சுவதன் மூலம் அதனை திசைதிருப்ப முடியும் என்பதை அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டியா தேசிய ஆய்வக விஞ்ஞானிகள் பரிசோதனையின் மூலம் நிரூபித்துள்ளனர்.