பலதும் பத்தும்
பிரித்தானியாவில் முடிவுக்கு வந்த இளநிலை வைத்தியர்களின் போராட்டம்!
பிரித்தானியாவில் உள்ள இளநிலை வைத்தியர்கள் இரண்டு ஆண்டுகளில் 22 சதவீத ஊதிய உயர்வு என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டனர்.
இதன்மூலம் அவர்களின் நீண்டகால சம்பள முரண்பாட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வைத்திய சங்கத்தின் உறுப்பினர்கள் 66 சதவீதமானோர் அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை ஆதரித்தனர்.
ஒன்லைனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சுமார் 46,000 பேர் பங்கேற்றனர். வாக்களித்த 45,830 இளநிலை வைத்தியர்களில் மூன்றில் இரண்டு பங்கு (66%) பேர் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தனர்.
அதன்படி, அவர்கள் அடுத்த இரு ஆண்டுகளில் சராசரியாக 22.3ம% சம்பள உயர்வைப் பெறுவார்கள். இதன்மூம் பிரித்தானியாவின் இளநிலை வைத்தியர்கள் 18 மாதங்களில் தனித்தனியாக மேற்கொண்ட 11 வேலை நிறுத்தப் போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.