டெல்லி முதல்வர் பதவி ராஜினாமா; காரணம் என்ன?
பிணையில் விடுவிக்கப்பட்டட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கட்சிக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் ஆரம்பமான நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
சட்டத்தின் நீதிமன்றத்தில் தனக்கு நீதி கிடைத்துவிட்டதாக கூறிய அவர் து மக்களின் நீதிமன்றத்தில் நான் நீதியை பெறுவேன் என்றும் மக்கள் கட்டளையிட்டால் மாத்திரமே முதல்வர் கதிரையில் அமர்வேன் என்றார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமுல்படுத்தியதில் இடம்பெற்ற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திக திகதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
அந்த வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது.
ஆனால் அதற்கு முன்பே ஜூன் மாதம் 26 ஆம் திகதி , மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது.
இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 06 மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கப்பட்டது.