இரு தீமைகளில் யார் குறைவானவர்?; ட்ரம்ப், கமலா குறித்து போப் பிரான்சிஸ் கருத்து
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இந்தோனேஷியா, தைமூர், நியூகினியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த போப் பிரான்சிஸ் ரோம் திரும்பும் விமானத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தல் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில்,
“ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப் இருவருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள்.
புலம்பெயர்ந்தவர்களை துரத்துவதும் குழந்தைகளை கொல்வதும் என இரண்டும் வாழ்க்கைக்கு எதிரானது.
இரண்டு தீமைகளில் குறைவானதை தெரிவு செய்ய வேண்டும். இரண்டு தீமைகளில் யார் குறைவானவர்? அந்தப் பெண்ணா அல்லது அந்த ஜென்டில்மேனா எனக்குத் தெரியாது.
அமெரிக்காவைச் சேர்ந்த கத்தோலிக்க வாக்காளர்கள், வாக்களிக்கச் செல்லும் முன் தங்களது மனசாட்சியை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.