ட்ரம்ப் பேசுவதைப் பார்த்து ஓடி ஒளிந்த நாய்: வலுக்கும் கண்டனங்கள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டெனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் கடந்த 11ஆம் திகதி புதன்கிழமை பிலடெல்பிய நகரில் செய்தி நிறுவனமொன்று நடத்திய நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர்.
இவ் விவாதத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
2017 முதல் 2021 வரையில் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது குடியேற்றவாசிகள் மீது கடுமையான போக்கை கடைபிடித்தார்.
கமலா ஹாரிஸுடனான விவாதத்திலும் அந்த வெறுப்பு வெளிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ட்ரம்ப், “ஓஹியோ மாகாணத்திலுள்ள ஸ்ப்ரிங்பீல்ட் இல் குடியேற்றவாசிகள் மக்களின் வளர்ப்பு நாய்களை கொன்று சாப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவுக்குள் வருபவர்கள் நாய்கள் மற்றும் பூனைகளை கொன்று உணவாக உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இதுதான் தற்போது இந் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது” என்றார்.
ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு பல கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ட்ரம்ப் நாய்கள் குறித்து பேசியதை , தனது உரிமையாளருடன் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த கோல்டன் ரெட்ரீவல் வகை நாயொன்று, அங்கிருந்து எழுந்து கதிரையின் பின்னால் ஒளிந்துகொண்டு பயத்தில் உறைந்திருந்தது. அதனை உரிமையாளர் காணொளியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி ட்ரம்பின் இக் கூற்றுக்கு வெள்ளை மாளிகையும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.