ஓட்டுநரின்றி பயணிக்கும் கார்கள்
அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத கார்கள் சாலைகளில் வலம் வரத் தொடங்கியுள்ளன.
அந்தக் காரில் ஏறி நாம் எங்கே போக வேண்டுமோ அந்த இடத்தைக் கூறி கட்டளையிட்டால் போதும். ஓட்டுநர் யாரும் இல்லாமல் அந்தக் காரில் உள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருளே நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான நேரம் குறைந்த ஒரு வழியை முடிவு செய்து, தானாகவே வாகனத்தை ஓட்டிக்கொண்டு குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக நம்மை இறக்கி விட்டு விடும்.
கார், அது செல்லும் சாலையைப் புரிந்து கொள்ள அதனுடன் ஒரு கெமரா இணைக்கப்பட்டு இருக்கும். கெமராவிலிருந்து வரும் படங்கள் கணினிக்கு உள்ளிடப்பட்டு அந்தக் கணினியில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அந்தப் படங்களைப் புரிந்து கொள்ளும். ஒரு வேலை எதிரே ஏதாவது வாகனம் வரும் படம் தெரிந்தால் உடனடியாக பிரேக்கை அழுத்தி கார் நின்று விடும்.
இப்படி ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கும் கார்கள், நம்போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் அறிமுகமாக இன்னும் சில வருடங்களேயாகும் என்பதில் ஆச்சிரியமில்லை…!