அமெரிக்க போர் நிறுத்த முன்மொழிவை நிபந்தனைகளின்றி செயற்படுத்த தயார்
இஸ்ரேல்- ஹமாஸ் போர் ஆரம்பமானதிலிருந்து ஐந்தாவது முறையாக மத்திய காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையால் இயக்கப்படும் அல்-ஜௌனி பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான பெண்களும் குழந்தைகளும் பரிதாபமான முறையில் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவன ஊழியர்கள் அறுவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் ஆரம்பமானதிலிருந்து உயிரிழந்த ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.
அமெரிக்கா முன்மொழிந்த, ஐ.நா ஆதரவுடன் போர் நிறுத்தத் திட்டத்தை புதிய நிபந்தனைகள் ஏதுமின்றி செயல்படுத்தத் தயாராக இருப்பதாக ஹமாஸ் மத்தியஸ்தர்களிடம் கூறியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 41, 118 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,125 ஆக அதிகரித்துள்ளது.