பலதும் பத்தும்

குழந்தைகள் கைபேசி பயன்படுத்த தடை – சுவீடன் அரசு உத்தரவு

கைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதாக தெரிவித்து, குழந்தைகள் கைபேசிகளை பயன்படுத்த தடை விதித்து சுவீடன் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை பார்க்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரமும், 6 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 2 மணி நேரம் வரையும் கைபேசியை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 முதல் 18 வயதுடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை செல்போனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் எனவும் பெற்றோருக்கு சுவீடன் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.