பொலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை; வெற்றியடைந்த இந்தியா
இந்தியா அதன் பாதுகாப்புத் திறனை அதிகப்படுத்துவதற்காக அதன் பாதுகாப்புப் படையில் அதி நவீன ஆயுதங்களை இணைத்து வருகின்றது.
அதேபோல் ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகின்றது.
அதன்படி, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சுமார் 3500 கிலோமீட்டர் தொலைவு வரையில் பாய்ந்து செல்லும் பொலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
கே4 பிரிவைச் சேர்ந்த இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களையும் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனைகளின் மூலம் அணு ஆயுத ஏவுகணையில் நிலம், வான், கடல் என மூன்று துறைகளிலும் இருந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறிவிட்டது.
இந்த ஏவுகணை பரிசோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பொலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா பரிசோதிப்பது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.