உத்திரப் பிரதேசம் “இயற்கை தாலாட்டும் அழகு பூமி”
உத்திரப் பிரதேசம், பார்ப்பதற்கு பச்சைப்பசேல் என்று குளிர்ச்சி பொருந்திய பிரதேசமாக காணப்படுகிறது..!
முல்லைத்திவு, கிளிநொச்சி, ஓமந்தை, வவுனியா, போன்ற பிரதேசங்கள் போலவே, அடர்ந்த காடுகளும், புல்வெளிகளும், விரைந்து பாயும் ஆறுகளும், வயல்வெளிகளும், ஆடு மற்றும் செம்மறியாடுகளை வீதிஓரங்களிலே, மேய்ப்பவர்களையும், எருமை மாடுகளை வீட்டின் முற்றத்திலே கட்டி வைத்து பால் கறந்து விற்பவர்களையும், எருமை மாட்டிற்கு போடுவதற்காக புல்வெளிகளிலும், வீதி ஓரங்களிலும் புற்களை வளைந்த கத்தியால் வெட்டி, தலையிலே சுமந்து செல்பவர்க கையும் காணமுடிகிறது..!
வீதி ஓரங்களிலே மருதமரங்களையும், அரச மரங்களையும் இன்னும் சில வேறுவிதமான மரங்களையும் நாட்டி அருமையாக வளத்துள்ளார்கள்..!
ஆங்காங்கே பல இடங்களிலே வேப்பமரங்களை காணமுடிந்தது..!
மொத்தத்தில், நாம் பயணித்த பாதையோரங்களைப் பார்க்கும் போது, உத்திரப் பிரதேசம் மிக அழகான சோலைகளைக் கொண்ட பிரதேசமாகவே எனக்குத் தோன்றுகிறது..!