பலதும் பத்தும்
பூமியை இயக்கும் மூன்றாவது புலம் – அம்பிபோலார்: குழப்பங்களின் முகவர்
பூமி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய புரிதலை மாற்றியமைக்கும் மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை ‘குழப்பங்களின் முகவர்’ என அழைக்கின்றனர். பூமியைச் சுற்றியுள்ள இருமுனைப் புலமான இதனை எண்டூரன்ஸ் ஆய்வுத் திட்டத்தின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரையில் நமது கிரகம் இரண்டு ஆற்றல் புலங்களை உருவாக்குவதாகவே அறியப்பட்டு வந்தது.
அவற்றுள் புவி ஈர்ப்பு புலம் – வளிமண்டலத்தை இறுக்கமாக பிடித்து வைத்துள்ளது. மற்றது காந்தப் புலம் – இது சூரியக் காற்றிலிருந்து கிரகத்தை பாதுகாக்கிறது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூன்றாவது புலம் அம்பிபோலார் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆம்பிபோலார் புவியீர்ப்பு விசைக்கு எதிர் செயல்பாடான துகள்களை விண்வெளியை நோக்கி தள்ளுகிறது.