ரணில், தினேஷிடம் விரைவில் விசாரணை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல செய்ததாக கூறப்படும் இம்யூனோகுளோபுலின் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கெஹலியவின் அமைச்சரவை பத்திரத்தை அங்கீகரித்த முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் 11 பேர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் விரைவில் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, ரமேஷ் பத்திரன, விஜேதாச ராஜபக்ச, நளின் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க மற்றும் நசீர் அஹமட் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவையில் தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.