வெளியில் செல்லும்போது ஆலய மணி அடித்தால் என்ன அர்த்தம்?: நல்ல சகுனமா..!
இன்றளவும் வெளியில் செல்லும்போது நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்த்துவிட்டு செல்பவர்கள் இருக்கிறார்கள். அதிலும் விலங்குகள், பறவைகள் போன்றன சகுனத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
பூனை
நல்ல காரியத்துக்காக வெளியில் செல்லும்போது பூனை குறுக்காக வந்தால் கெட்ட சகுனம் எனக் கூறப்படுகிறது. உண்மையில் பூனை வலமிருந்து இடமாக குறுக்கே பாய்ந்தால் நல்ல சகுனமாம்.
நாய்
வெளியில் செல்லும்போது வீட்டில் வளர்க்கப்படும் நாய் வாயில் கயிறைக் கவ்வி வந்தாலோ அல்லது எதிரில் வந்தாலோ நல்ல சகுனமாகவும் பணம் வந்து சேரும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் நாய் குறுக்கே வந்து நிற்பது, அல்லது குரைப்பது, கால்களை நக்குவது, நம் மீது தாவி ஏற முயல்வது போன்றன கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.
ஆந்தை
நாம் செல்லும் பாதையில் ஆந்தை வந்தால் ஏதோ குழப்பத்துக்குள் சிக்கப் போகிறோம் என்று அர்த்தம்.
காகம்
காகம் இடமிருந்து வலமாகச் சென்றால் நன்மை. அதுவே வலமிருந்து இடமாகச் சென்றால் செல்லும் காரியம் தோல்வியில் முடியும்.
நாம் வெளியில் செல்லும்போது நல்ல சகுனங்களாக பார்க்கப்படுபவை…
ஆலய மணி அல்லது தொலைபேசி மணி, யாரேனும் கையில் பால் எடுத்து வருவது, தண்ணீர் குடத்துடன் வருதல், சுமங்கலிப் பெண், பூக்கள், அரசன், முத்து, மாமிசம், குடை, தேன், மங்கல வாத்தியம், சங்குநாதம், வேத ஓசை, பழங்கள், கரும்பு, கழுதை, பசு, மான், கிளி, கண்ணாடி, கன்றுடன் பசு
நாம் வெளியில் செல்லும்போது கெட்ட சகுனங்களாக பார்க்கப்படுபவை…
துவைக்கப்பட்ட துணி மூட்டை, பாம்பு, ஆடு, ஏணி, நெருப்பு, குரங்கு, எண்ணெய், முயல், விறகு கட்டு, உப்பு, அவிழ்ந்த தலை, மொட்டைத் தலை, சன்னியாசி, கோடாரி, அரிவாள்