நரகத்துக்கு இணையான இடம்: குவாசர் கருந்துளை – ஆய்வு கூறுவது என்ன?
அண்மையில் சூரியனை விட 500 ட்ரில்லியன் அளவு ஒளி வீசும் கருந்துளையொன்றை கண்டுபிடித்தனர். இதனை குவாசர் என வானியலாளர்கள் அழைக்கின்றனர். இது அதிகமாக ஒளி வீசுகின்றன.
கருந்துளைகளை காற்று மற்றும் தூசிகள் அண்மிக்கும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே அதன் அதிகபட்ச ஒளிக்கு காரணம்.
இக் குவாசருக்கு J0529-4351 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த குவாசர் பூமியிலிருந்து வெகு தூரம் இருப்பதால் அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் வருடங்களுக்கும் மேல் எடுத்துக்கொண்டதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வானியலாளர்கள் செய்த ஆய்வில், இது சுமார் 1700 கோடி சூரியன்களின் நிறையைக் கொண்டதாக இந்த கருந்துளை உள்ளது.
மேகங்களின் வேகம், அதிக வெப்பம், காஸ்மிக் கதிர்களின் வெளியீட்டினால் இந்த குவாசர் நகரத்துக்கு இணையான இடம் என கூறப்படுகிறது.
இதுவரையில் இந்த குவாசரினால் பூமிக்கு பாதிப்பு ஏற்படும் என எந்த அறிகுறியும இல்லை.