சஜித்தே தலைவர் என்ற பேச்சுக்கே இடமில்லை
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்க முடியாது என கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளும் ஒன்றிணைய விரும்பினால் இவ்வாறான நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகள் அவற்றை மேலும் தாமதமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தால், மீண்டும் சிறிகொத்தவுக்கு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு எந்த தடையும் இல்லை. அதற்கான வாயில் திறந்தே இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.