பலதும் பத்தும்
அடுத்தவர்களின் சுதந்திரத்திற்கு ஒரு மரியாதை…
தென் கொரியாவில் இருந்து அமெரிக்காவிற்கு 10 மணி நேர விமானப் பயணத்தின் போது, விமானத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ஒரு தாய் தலா ஒரு பையைக் கொடுத்தார்.
அந்த பையில் மிட்டாய் , மற்றும் ear plugs ஆகியவை இருந்தன, கூடுதலாக அந்தப் பையில் ஒரு குறுஞ்செய்தி இருந்தது.
அதாவது, “எனக்கு 4 மாதங்கள் ஆகின்றன, இன்று நான் என் அம்மா மற்றும் பாட்டியுடன் அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறேன். சற்று பயந்து இந்த பிரயாணம் மேற்கொள்கிறேன்,
ஏனென்றால் இதுவே என் முதல் விமானப் பயணம்.
நான் அழுவதும், அதனால் உங்களுக்கு தொந்தரவு ஆவதும் சகஜம் தான். முடிந்த வரை அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன், ஆனால் என்னால் நிச்சயமாக அழாமல் இருப்பேன் என்று கூற முடியாது.
என் அழுகை சத்தம் மிக அதிகமாக இருந்தால் இந்த ear plug பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துகள்.