பலதும் பத்தும்
செம்பியாவில் கடும் வறட்சி; காட்டு விலங்குளைக் கொன்று மக்களுக்கு உணவளிக்கும் அரசு
தென் ஆபிரிக்க நாடான செம்பி (Zambia)யாவில், எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீர் இன்றி தவிக்கின்றனர்.
எனவே அவர்களுக்கு உணவளிக்கும் விதமாக 723 காட்டு விலங்குகளைக் கொன்று அதிலிருந்து கிடைக்கும் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த ஜோம்பிய அரசு தீர்மானித்துள்ளது.
இதில் 300 வரிக்குதிரைகள், 100 வைல்ட்பீஸ்ட் wildebeest காட்டெருமைகள், 83 யானைகள் 50 இம்பாலா மான்கள், 100 எலான்ட் வகை மான்கள், 30 நீர்யானைகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.
ஏற்கனவே 150 விலங்குகள் கொல்லப்பட்டு அதன் மூலம் 53 தொன் இறைச்சி பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் காட்டு விலங்குகள் கொல்லப்படுகின்றமை எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது வருத்தமளிக்கிறது.