மனைவியை கஞ்சா வழக்கில் சிக்க வைத்த கணவர்
சிங்கப்பூரில் மனைவியிடமிருந்து சீக்கிரமாக விவாகரத்து பெற வேண்டும் என்று நினைத்து அவரின் காரில் கஞ்சாவை வைத்த கணவர், இறுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான டான் சியாங் லாங் என்ற நபருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே மனச்சங்கடங்கள் ஏற்பட, அக்டோபர் 2022ஆம் ஆண்டு, இவரின் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
ஆனால், விவாகரத்து கிடைக்கவில்லை. ஏனெனில், அந்நாட்;டு சட்டத்தை பொறுத்தவரை திருமணமாகி குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆனவர்கள் மட்டுமே விவாகரத்திற்கு விண்ணப்பிக்க முடியும் . ஆனால், இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆகியுள்ளது.
இந்த நிலையில் டான் சியாங், சீக்கிரமாக விவாகரத்து பெற ஏதேனும் வழி உண்டா என்று வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்தில், “மனைவி ஏதேனும் கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டால், எளிதில் விவாகரத்தும் கிடைக்கும், மனைவிக்கு மரண தண்டனையும் கிடைக்கும்.” என்று தெரியவந்துள்ளது.
இதனால், மனைவியை குற்றப்பின்னணியில் சிக்கவைக்க முடிவு செய்த டான் சியாங், அவரின் மனையின் காரில் கஞ்சா பெக்கெட்டுகளை வைத்துள்ளார்.
ஆனால் இதுபற்றி அறிந்த அவரின் மனைவி, பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
விசாரணையில், டான் சியாங் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட இவருக்கு, கடந்த 29 ஆம் திகதி 3 வருடம் மற்றும் 10 மாதங்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.