டொரான்டோவில் வீடு விற்பனை பாரியளவில் வீழ்ச்சி
கனடாவின் டொரான்டோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனேடி வீட்டு நிர்மான ஒன்றியம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்திற்கான வீட்டு விற்பனை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 654 புதிய வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இது கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 48 வீத வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டு கால சராசரியுடன் ஒப்பிடும் செய்யும்போது 70 வீத வீழ்ச்சி எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாாறாயினும், எதிர்வரும் மாதங்களில் வட்டி வீதங்கள் குறைவடையும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக வீட்டு விற்பனை குறைவடைந்துள்ளதாக துறைசார்ந்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகளவு வீடு நிரம்பல் செய்யப்பட்டிருப்பதாகவும் இதனால் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.