பிரான்சில் குற்றவாளியின் குடியுரிமை பறிப்பு: சிறை தண்டனை முடிந்ததும் நாடு கடத்த தீர்மானம்
பிரான்சில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவரின் பிரான்ஸ் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றச் செயலில் ஈடுபட்ட 26 வயதான இளைஞர் ஒருவரின் குடியுரிமை தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவிப்பில் குடியுரிமை பறிக்கப்பட்ட தகவல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாக இளைஞன் 19 வயதாக இருந்த போது 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் ஐந்தாம் திகதி ஈபில் கோபுரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அவரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, அவரின் சிறைத்தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.