உலகின் முடிவை போல தோன்றியது 2 செகன்ட்கள் எனது மகளை கடலில் தொலைத்தேன்; சிசிலி படகு விபத்தில் சிக்கிய பெண்
சிசிலியில் உல்லாசப்பயணிகளின் ஆடம்பர படகு நீரில் மூழ்கியவேளை தனது இரண்டு வயது மகளை காப்பாற்றுவதற்காக தான் மேற்கொண்ட போராட்டத்தினை தாய் ஒருவர் விபரித்துள்ளார்.
சிசிலியில் கடலில் பெயேசியன் என்ற ஆடம்பர படகு மூழ்கியவேளை காப்பாற்றப்பட்ட 15 பேரில்; ஒருவரான சார்லொட்டே கொலுன்ஸ்கி என்ற பெண் தனது நீரின் மேற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த தனது இரண்டு வயது மகளை காப்பாற்றுவதற்காக மேற்கொண்ட போராட்டத்தினை விபரித்துள்ளார்.
பிரிட்டனின் தொழிலதிபர் மைக் லிஞ் உட்பட ஆறு பேர் காணாமல்போயுள்ளனர்,ஒருவரின் உடலை சிதைவுகளின் உள்ளேயிருந்து மீட்டுள்ளனர்.
22 பேருடன் பயணித்துக்கொண்டிருந்தபடகு புயலை எதிர்கொண்டதால் நீரில்மூழ்கியது.
கப்பல் மூழ்கியவேளை நாங்கள் மேற்தளத்தில் இருந்ததால் உயிர்பிழைத்தோம் என சார்லொட்டே கொலுன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நாங்கள் இடிமுழக்கம் மின்னல் எங்கள் படகை தள்ளாடச்செய்த அலைகள் காரணமாக உறக்கத்திலிருந்து விழித்தோம்,அது உலகின் முடிவை போல காணப்பட்டது பின்னர் நாங்கள் நீரிற்குள் தூக்கி வீசப்பட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு இரண்டுசெகன்ட்கள் நான் எனது மகளை நீரில் தவறவிட்டேன்,ஆனால் சீற்றத்துடன் காணப்பட்ட அலைகளின் மத்தியில் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது பலம் முழுவதையும் பயன்படுத்தி எனது குழந்தையை மிதக்கவைத்தேன்,அவள் நீரில் மூழ்காமலிருக்க எனது கைகளை மேல்நோக்கி நீட்டினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களை சுற்றிமுழுவதும் இருட்டாகயிருந்தது ,நீரில் என்னால் எனது கண்ணை திறந்துவைத்திருக்கமுடியிவில்லை,நான் உதவிக்காக அலறினேன் ஆனால் என்னை சுற்றிலும் ஏனையவர்களின் அலறலையே கேட்டேன் என சார்லொட்டே கொலுன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உயிர்காக்கும் படகை பயன்படுத்தியதால் அவரும் 11பேரும் மேலே ஏறமுடிந்தது.
குடும்பத்தை சேர்ந்த மூவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனது படகின் பணியாளர்கள் சிலரை காப்பாற்றினார்கள் என அருகில் பயணித்துக் கொண்டிருந்த படகின் கப்டன் தெரிவித்துள்ளார். அவர்களில் மூவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.