ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலை; கருத்துக்கணிப்புகளில் வெளியான தகவல்
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பைவிட கமலா ஹாரிஸ் கணிசமானளவு முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோஷிங்டன் போஸ்ட் ஏபிசி நியூஸ்-இப்சோஸ் கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கின்றமை முன்னிலை வகிக்கின்றமை தெரியவந்துள்ளது.
ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் நான்கு புள்ளிகள் முன்னிலை வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கும் நிலையில் பிரதான இரு வேட்பாளர்களான ஹாரிஸ் மற்றம் ட்ரம்ப் இடையேயான பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனநாயகக் கட்சியினருக்கு இதுவொரு கணிசமானளவு வளர்ச்சியாகும்.
மேலும், ஏழு முக்கிய மாநிலங்களில் – பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா, ஜார்ஜியா, நெவாடா மற்றும் வட கரோலினா – ஹாரிஸ் மற்றும் டிரம்ப் 50-50 என சமநிலையில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.