ரஷ்யாவுக்குள் ஊடுருவிய உக்ரெய்ன்: பெல்கொரோட் அவசர நிலை
ரஷ்யாவுக்குள் உக்ரெய்னின் திடீர் ஊடுருவலின் போது பிரித்தானிய சேலஞ்சர் 02 இராணுவ ஆயுத தாங்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உக்ரெய்ன் தற்காப்புக்காக பிரித்தானியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த முழு உரிமை உள்ளதென பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தனது துருப்புக்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பகுதியை விட்டு பொதுமக்கள் வெளியேற மனிதாபிமான தாழ்வாரங்களை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
உக்ரெய்னின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்யாவின் சில பகுதிகளில் இராணுவ அதிகாரி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாக உக்ரெய்னின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி
உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்குள் 35 கிமீ தொலைவில் இருப்பதாகவும், அங்கு 82 குடியேற்றங்கள் உட்பட 1,150 சதுர கிமீ நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துவதாகவும் சிர்ஸ்கி கூறுகிறார்.