செய்திகள்
அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தியது உக்ரைன் – ரஸ்யா மீது தாக்குதல்
அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் ரஸ்யா மீது முதல் தடவை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா அனுமதி வழங்கிய மறுநாள் உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உக்ரைன் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
உக்ரைனின் வடபகுதி எல்லையில் உள்ள பிரையான்ஸ்க் பகுதியை உக்ரைன் இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள ரஸ்ய அதிகாரிகள் ஐந்து ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் ஒன்றின் சிதறல்கள் இராணுவ தளமொன்றின் மீது விழுந்து வெடித்ததில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் உக்ரைன் செலுத்திய எட்டு ஏவுகணைகளில் இரண்டை ரஸ்யா இடைமறித்து அழித்துள்ளதாக தெரிகின்றது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.