பலதும் பத்தும்

ஏழைப்பங்காளன் ராபின் ஹுட் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் இவனை பற்றி ஏராளமான நாவல்களும் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.

(ROBIN HOOD)  ராபின் ஹுட் யார்? நிஜமாகவே இப்படி ஒருவன் இருந்தானா? அல்லது கற்பனைக் கதாபாத்திரமா? இலக்கியவாதிகளைக் குழப்பும் விஷயம் இதுதான்.

ராபின்ஹுட் பற்றி கர்ண பரம்பரையாக கதை சொல்லப்பட்டு,அதன் பின்னரே புத்தகங்களாக எழுதப்பட்டுள்ளன. ராபின் ஹுட் நிஜமாக வாழ்ந்த மனிதன் என்று ஒரு பிரிவினரும் கற்பனைக் கதாபாத்திரம் தான் என்று மற்றொரு பிரிவினரும் வாதிட்டு வருகின்றனர். இரு பிரிவினருமே தத்தம் கூற்றுக்கு ஆதாராமாகப் பல விஷயங்களை கூறுகின்றனர்.இரு விதமான கருத்துகளுமே முரண்பட்டு இருப்பதுதான் துரதிருஷ்டமானது.

முதலில் ராபின் ஹுட் பற்றி இருசாரருமே ஓப்புக் கொள்ளும் விஷயங்கள்:

நேர்மையான சிந்தனை உள்ளவன். ஏழைகளுக்கு உதவுபவன், மதநம்பிக்கை மிகுந்தவன்.
இதுவரை வந்த நாவல்களும், திரைப்படங்களும கூட ராபின் ஹுட் ராஜ பக்தி நிறைந்தவனாகவே காட்டியுள்ளன. மன்னரை எதிர்த்ததாகவோ, அரண்மனையைக் கொள்ளையடித்ததாகவோ தகவல்கள் இல்லை.

இலக்கியவாதிகளின் சர்ச்சையால் ராபின்ஹுட் பற்றிய தகவல்களை துருவ ஆரம்பித்தபோது கிடைத்த வேறு சில தகவல்கள்.

1228 பதுக்கப்பட்ட கோதுமையை மீட்கும் இயக்கம் என்று ஒரு இயக்கம் செயல்பட்டு வந்தது. அந்த இயக்கத்தின் முக்கியமான ஆள் ராபின் ஹுட் என்று குறிப்பு கிடைத்திருக்கிறது.

சரித்திர ஆராய்ச்சியாளர்கள் முற்றிலும் மாறான ஒரு கருத்தைக் கூறியுள்ளனர். அதாவது,
மூன்றாம் ஹென்றிக்கு எதிராகப் புரட்சி செய்தவன் ராபின்ஹுட் என்று கூறியுள்ளனர்.
1322 ஒரு டாக்குமென்டரி படம் வெளியாகியுள்ளது.அதில் ராபின்ஹுட் வசித்த இடம் என்று ஒரு சிறிய வீட்டைக் காட்டியுள்ளனர் அவன் எப்போதும் அமர்த்து சிந்திக்கும் இடம் என்ற ஒரு கல் மேடையைக் காட்டியுள்ளனர்.

ராபின்ஹுட் ஒரே இடத்தில் வசிக்கவில்லை. நாடோடி போல் தன் இருப்பிடத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கிறான்.தன் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை காட்டில் கழித்துள்ளான் என்றும் கூறியுள்ளனர்.

சில தகவல்கள் ராபின்ஹுட் நிஜத்தில் வாழ்ந்த மனிதன் என்று நம்ப வைத்தாலும், பல தகவல்கள் அது கற்பனை கதாபாத்திரம் தான் என்று அடித்துக் கூறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.