முச்சந்தி

மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில் வியாபாரங்கள்

இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாரிக்கொள்வர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் பேசும்போது ஆலமரத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் எப்படியும் வந்துவிடுமாம். வர்த்தகர் கூட்டத்தைக் குறிக்கும் ‘பனியாவே’ – ஆங்கிலத்தில் மரத்தின் பெயரானது. இதுவே ‘பானியன் ட்ரீ’ என்று பெயர் வந்த வரலாறு.

கருமேகங்களைச் சுண்டியிழுக்கும் மழைக் கவர்ச்சி மரங்களில் முதலிடம் ஆலமரத்திற்குத்தான். இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இதை அடர்ந்த காடாகக் காணலாம். கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் நிறைய உண்டு. உலகிலேயே பெரிய ஆலமரம் கல்கத்தா தாவரவியல் பூங்காவில் உள்ளது (ஹீக்ளி நதியில் கட்டப்பட்டுள்ள ஹெளரா இரும்புப் பாலத்தைக் கடந்து சென்று பார்க்கலாம்.) 1782-இல் ஒரு ஈச்சமரத்தில் முளைத்து வளர்ந்த இந்த ஆலமரம் ஒன்றரை ஏக்கர் பரப்பிற்கு விழுதுகளை இறக்கிக் கிழக்கு மேற்காக சுமார் 400 அடியும் தெற்கு வடக்கில் சுமார் 300 அடியும் பரவி இதன் சுற்றளவு சுமார் 2000 அடி என்று சொல்லுகிறார்கள்.

ஆலமரம் விழுது இறக்கி நிற்கும் காட்சி பற்றி பிளினி (கி.பி. 70) இவ்வாறு எழுதுகிறான். பண்டைய இந்திய வரலாற்றுக்குப் பிளினியின் குறிப்பு மிகவும் ஆதாரமானது. “இந்தியாவில் உள்ள ஒரு மரத்திற்கு அது தனக்குத்தானே நடவு செய்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. பூமியின் மீது தன் வலுவான கரங்களை நீட்டிப் பரப்பிக்கொண்டு குடைவிரிக்கிறது. ஓராண்டுக்குள் வேர்களை ஊன்றிக்கொண்டு (விழுது இறங்குவது) புதிய வேரைக் கிளையிலிருந்து மீண்டும் மீண்டும் இறக்கிய வண்ணம் வானில் படர்கிறது.”

கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குரிய சுரபாலர் விருக்ஷ ஆயுர்வேத நூலில் ஒரு நுட்பமான வைதீகக் குறிப்பு உள்ளது. ’சாத்திர முறைப்படி யார் இரண்டு ஆலமரங்களை நடுகின்றாரோ அவருக்குக் கைலாயத்தில் ஒரு இடம். கூடவே கந்தர்வக்கன்னியரின் கவனிப்பும் கிடைக்கும்.’ (பாடல் 13) ‘வீட்டின் கிழக்கில் ஆலமரம் நட்டால் வேண்டிய வரம் கிட்டும்’ (பாடல் 24). காலையில் கிழக்கு வெயில் சுட்டெரிக்கும். ஆகவே நெடிய நிழல் வீட்டில் விழ கிழக்கே ஆலமரம்.

படித்ததில் பிடித்தது

Vशुद्धि on X: "Banyan tree- is generally said to be the humble abode of  Bhagwan Krishna. Banyan trees are always found either near a temple or  their is a shrine below the

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.