பலதும் பத்தும்
எமோஜிக்கு உயிர் வந்தால் இப்படி தான் இருக்கும்; வைரலாகும் குட்டி தேவதை
ஆறாவது விரலாக நம் கைகளில் எப்போதும் திறன்பேசிகள் தவழ்கின்றன. இந்த யுகத்தில் ‘டெக்ஸ்ட் சாட்’களில் வார்த்தைகளை நீட்டி முழக்காமல் சுருக்கமாக ‘சாட்’ செய்வது பெரும் கலை.
முன்பு ‘சாட்’களில் ‘Okay’ என்று குறிப்பிடப்பட்ட சொல் ‘Ok’வாகி, பின்னர் ‘K’ என்று சுருங்கிப் போனது.
இப்போதைய இளைஞர்கள் எமோஜிகள் மூலமே சமூக ஊடங்களில் வாட்ஸ்அப், மெசஞ்சர்களில் நீண்ட நேரம் அரட்டையடிக்கிறார்கள்.
தொடக்கத்தில் சிரிக்க, அழுக, கோபப்பட, மகிழ்ச்சி எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் பொம்மைச் சித்திரங்கள் எமோஜிகளாக அறிமுகமாயின.
இது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவே, அரட்டைகளில் நிரந்தர இடத்தைப் பிடித்து எமோஜி அரட்டைகள் வளர்த்தன. இப்படிப்பட்ட எமோஜிக்கு உயிர் வந்தால் எப்படி இருக்கும் என்று தெரியுமா? இந்த சுட்டி பெண்ணின் ரியக்ஷனை பாருங்கள்.