தேனீக்களை வளர்ப்பதன் மூலம் யானைகளை பாதுகாக்க முடியும்
ஆப்பிரிக்க விவசாயிகள் தங்கள் பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க மிகக் குறைந்த வளங்களைக் கொண்டுள்ளனர். தங்கள் பயிர்களுக்கு அருகில் வரும் விலங்குகளை பயமுறுத்துவதற்கு வெடிகளை பயன்படுத்த அனுமதியில்லை.
“யானை மற்றும் தேனீக்கள் திட்டத்திலிருந்து” அவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைத்தது.
இதன் கீழ் அவர்கள் தங்கள் பயிர்களுக்கு அருகில் தேனீ வளர்க்கத் தொடங்கினர். யானைகளுக்கு தேனீக்களை கண்டால் பயம். அவை கண்களின் உட்புறத்தில் அல்லது தும்பிக்கையில் பலமாக கொட்டிவிடும் என்பது அவைகளுக்குத் தெரியும். அதனால் தேனீ சத்தத்தைக் கேட்டால் யானை மறுதிசையில் சென்றுவிடும்.
யானைகளை அழிவிலிருந்து பாதுகாக்க இது ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது. யானைகளை பயமுறுத்துவதற்கு மட்டுமல்லாமல் தேனீக்களின் மூலம் கூடுதல் வருமானமும் கிடைத்தது. யானைகளை காயப்படுத்தாமல், தேனீக்களை வளர்ப்பதன் மூலம் யானைகளையும் பாதுகாக்க முடியும்.