பலதும் பத்தும்

நடிகை சுஜாதா மரணம் அடுத்த சந்ததியை உருவாக்காமல் போனது

நடிகை சுஜாதா கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கையில் பிறந்தார், மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனார், தெலுங்கு கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தார், ஆனால் வெள்ளித்திரையின் பணம் புகழ் பரபரப்பை விட்டு எப்போதும் விலகி இருந்தார்.

சுஜாதா வாழ்ந்த காலம் போலவே கடந்த 2011ம் ஆண்டு இவரது மரணமும் அடுத்த சந்ததியை உருவாக்காமல் போனது. திரையில் பல சோகமான கதாபாத்திரங்களில் நடித்த சுஜாதா சொந்த வாழ்க்கையும் சோகமானது.

இளையராஜா முதன் முதலில் இசை அமைத்த அன்னக்கிளி படத்தில் அன்னக்கிளியாக நடித்தார் சுஜாதா. இந்த படம் நல்ல ஓட வேண்டும் என்று நினைத்தார் இளையராஜா ஆனால் இந்த படம் ஓடக்கூடாது என்று நினைத்தார் சுஜாதா.

அன்னக்கிளி படத்தின் போது உடன் ஹீரோவாக நடித்த சிவக்குமாரிடம் சுஜாதா சார் இந்த படம் ஓடக்கூடாது கூடாது ஓடக்கூடாது இதோட நான் சினிமாவை விட்டு போய்விட ரொம்ப நல்லது. சினிமாவில் நடிக்க சொல்லி வீட்டில் ரொம்ப தொந்தரவு பண்றாங்க பொதுவா என்ன படம் யார் ஹீரோ எனக்கு என்ன சம்பளம் என்பதெல்லாம் எனக்கு தெரியாது சொந்தமாக பேங்க் அக்கவுண்ட் கூட எனக்கு கிடையாது இந்த படம் ஓடலைன்னா சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு யாரையாவது கல்யாணம் பண்ணிவிட்டு போய்விடலாம் இருக்கேன் என்றாராம்.
சுஜாதாவின் சொந்த விதி எப்படி இருந்தாலும் அவருக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்த படம் விதி.

1984 ஆம் ஆண்டு சுஜாதா மோகன், ஜெய்சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், படத்தில் வெளியே வந்த ‘விதி’ திரைப்படத்தை கே. விஜயன் இயக்கியிருந்தார் ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார்..
இந்தப் படத்தில் சுஜாதா வக்கீலாக நடித்திருந்தார் வசனங்களுக்காகவே புகழ் பெற்ற படம் ”விதி’ அக்காலத்தில் பட்டி தொட்டி எங்கும் “விதி” வசனங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு நீதிமன்ற காட்சிக்கு பல பக்கங்கள் வசனம் எழுதி இருந்தார் ஆரூர்தாஸ் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுஜாதா உடன் ஆரூர்தாஸை தொடர்பு கொண்டு என்னை சினிமாவை விட்டு விரட்டி அடித்து விடலாம் என்று நினைத்தீர்களா? இத்தனை பக்கம் வசனங்களை நான் எப்படி பேச முடியும் என்று கேட்டார் சுஜாதா.

அதற்கு ஆரூர்தாஸ் உங்களுக்கு அந்த அளவு திறமை இருக்கிறது.. நீங்கள் மிக சிறப்பாக இந்த வசனங்களை பேசுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று ஊக்கம் தந்தார். அவரின் நம்பிக்கையின்படியே “விதி”படத்தின் வெற்றியில் சுஜாதாவின் ஆவேசமான.உணர்ச்சிகரமான நடிப்புக்கு. வசன வீச்சுக்கு பெரும் பங்கு இருந்ததை யாராலும் மறுக்க முடியாது உண்மை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.