தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நடவடிக்கை
அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்படவுள்ள சமூக மற்றும் நீதிக்கான ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நுவரெலியா மாவட்ட கல்விசார் நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நுவரெலியாவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
எனவே அதனை மாற்றி வேறுபாதையில் பயணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது
மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக அடுத்த வருடம் மாநாடு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளேன்.
அத்துடன் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில்
தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் கிடைக்கும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட இந்து பூசகர்கள் குழுவின் தலைவர் வேலு சுவிஸ்வர சர்மா மற்றும் தொழில் வல்லுனர்கள் குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.