இந்து சமூகத்தை குறிவைத்து 200 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்: பங்களாதேஷில் வெடித்த மற்றுமொரு போராட்டம்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கடந்த 5 ஆம் திகதி ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்ந்த சில நாட்களில், நாட்டின் 52 மாவட்டங்களில் இந்து சமூகத்தை குறிவைத்து 200 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் கோரி, தலைநகர் டாக்கா உட்பட பல பகுதிகளில் சிறுபான்மை இந்து சமூகத்தினர் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குறித்த செய்திகளின் அடிப்படையில், சிறுபான்மை யினரைத் துன்புறுத்துபவர்களின் விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறுபான்மையினருக்கு நாடாளுமன்றத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களால் டாக்காவில் வீதிகள் கூட மூடப்பட்டன.
இந்த போராட்டங்களில் 700,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், இதற்கு சில மாணவர் ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் 170 மில்லியன் மக்கள்தொகையில் 8 சதவீதம் இந்துக்கள் உள்ளனர், அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை அவர்கள் ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பதற்ற நிலை உருவாகாமல் இருக்க பொலிஸ் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.