தேனை ஒருபோதும் சூடான நீருடன் சேர்த்து சாப்பிடாதீங்க
தேன்பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு சுவையை அதிகரிக்க பல உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
எனினும் ஒரு சில நேரங்களில் ஆரோக்கியமான உணவுகள் இரண்டை சேர்த்து சாப்பிடுவது தேவையற்ற சில எதிர்மறை விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும்.
குறிப்பாக சூடான நீருடன் தேன் எடுத்து கொண்டால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
சூடான நீரோடு தேன்
இந்த விஷயம் உண்மையில் உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருக்கும்.
ஏனென்றால் பலரும் எடையை குறைக்க முதலில் கையில் எடுக்கும் ஆயுதமாக வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிடும் முறை தான் இருக்கிறது.
ஆனால் வெந்நீருடன் தேன் கலந்து பருகுவது பல வழிகளில் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தேனை சூடு நீரில் கலப்பது தேனில் உள்ள நன்மை செய்யும் என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அழிய காரணமாகிறது.
ஆய்வின்படி 140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தேனின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு பாதிக்கப்பட்டு அது மிகவும் நச்சுத்தன்மையுடையதாக (toxic) மாறும் என்று குறிப்பிடப்பிட்டுள்ளது.
எனவே இனி மருத்துவ ஆலோசனை இல்லாமல் தேனை சூடு நீரில் கலந்து பருக வேண்டும்.