ரசியாவில் அவசர நிலை பிரகடனம்; ஊடுருவிய உக்ரெயன் படையினரால் ஏற்பட்ட பேரிழப்பு
உக்ரெய்ன் (Ukraine) படையினர் கருங்கடலின் வடக்கு பகுதியில் மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதலில் ரசிய (Russia) படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் அவர்களது இராணுவ உபகரணங்களும் அழிக்கப்பட்டதாக உக்ரெய்ன் பாதுகாப்பு புலனாய்வு (DIU) அமைப்பு தெரிவித்துள்ளது.
பிபிசியின் பிராந்திய செய்தியாளர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
“எதிரி படைகள் பிராந்தியத்திற்குள் வருவதால் ஏற்படும் விளைவுகளை அகற்ற இந்த அவசர நடவடிக்கை அவசியம்” என தெரிவித்துள்ளார்.
இதன்போது ரசிய படையினரின் கவசவாகனங்கள், இலத்திரனியல் போர் உபகரணங்கள் அழிக்கப்பட்டு ரசிய படைக்கும் பெரும் சேதம் விளைவிக்ககப்பட்டுள்தாகவும் பிபிசி செய்தி வெளியளிட்டுள்ளது.
மேலும் நேற்று ஊடுருவல் தொடங்கியதில் இருந்து குறைந்தது ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஆறு குழந்தைகள் அடங்குவதாகவும் ரசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரசிய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதல்களால் இராணுவ உபகரணக் கிடங்கு ஒன்றில் தீப்பரவியுள்ளது. மேலும் பல மணி நேர தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.