பலதும் பத்தும்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 56 ஆவது ஜனன தினம் இன்று !
சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அமரசிங்க எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, மற்ற மக்கள் விடுதலை முன்னணி அமைச்சர்களுடன் சேர்ந்து அநுரவும் 2005 ஜூன் 16 இல் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். பின்னர் செப்டம்பர் 2015 முதல் திசம்பர் 2018 வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடாவாகப் பணியாற்றினார்.
2014 பெப்ரவரி 2 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் 17ஆவது தேசிய மாநாட்டின் போது, சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின், கட்சியின் புதிய தலைவராக அநுர குமார திசாநாயக்க நியமிக்கப்பட்டார்.
2019 ஓகஸ்ட் 18ஆம் திகதியன்று, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசியல் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி, 2019 ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க தனது ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது. இத்தேர்தலில் திசாநாயக்க 418,553 (3%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
2023 ஓகஸ்ட் 29 அன்று, அநுர குமார திசாநாயக்க மீண்டும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவித்தது. தொடரும் இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் முந்தைய அரசாங்கங்களின் அதிருப்தியைப் பெருமளவில் தனது பரப்புரையில் பயன்படுத்தி தேர்தலில் 5,634,915 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றார்.