தோல்வியை சந்திக்குமா கன்சர்வேட்டிவ்?: பிரித்தானியாவில் இன்று பொதுத் தேர்தல்
பிரித்தானியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத்தேர்தல் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சி,கெய்ர் ஸ்டார்மரின் தொழிற்கட்சியிடம் தேர்தல் தோல்வியை புதன்கிழமை ஒப்புக்கொண்டுள்ளது.
வாக்கெடுப்பில் மத்திய-இடது தொழிற்கட்சி மாபெரும் வெற்றியைப் பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொழிற்கட்சியின் இந்த வெற்றியானது 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.
கட்சியின் வரலாற்றில் மிக மோசமான முடிவு பற்றிய கணிப்புகளை எதிர்கொண்ட கன்சர்வேடிவ்கள், தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு ஒரு பயனுள்ள எதிர்ப்பை வழங்குவதற்கு போதுமான இடங்களைப் பெற வேண்டும் என கூறியது.
“தொழிற் கட்சி மிகப்பெரிய பெரும்பான்மையை காணக்கூடும், இது இந்த நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய பெரும்பான்மை” என கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் “நான் ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவேன்” என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உள்ள 650 இடங்களில் 484 இடங்களை தொழிற்கட்சி வெற்றி பெறும் என்பது சர்வேஷனின் கருத்துக்கணிப்பின் படி தெரியவந்தது.
1997 ஆம் ஆண்டு கட்சியின் முன்னாள் தலைவர் டோனி பிளேயர் மகத்தான வெற்றி பெற்ற 418 இடங்களை விடவும், வரலாற்றில் மிக அதிகமானதாகும்.