இலக்கியச்சோலை

மெல்பனில் எழுத்தாளர் முருகபூபதிக்கு நடந்த பாராட்டு விழா!

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலானவற்றின் நிறுவனரும் பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான திரு. லெ.முருகபூபதிக்கு , கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டிற்கான இயல் விருதையும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை, இலக்கியச் சாதனையாளர் விருதையும் வழங்கிக் கௌரவித்திருப்பதை

 

முன்னிட்டு, அவரைப் பாராட்டு முகமாக அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் தலைமையில் கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் Berwick இல் அமைந்துள்ள, மூத்த பிரசைகள் மண்டபத்தில் விழா நடைபெற்றது.

செல்விகள் மோஷிகா பிரேமதாச, ஶ்ரீசேகா பிரேமதாச ஆகியோர் தமிழ் வாழ்த்துப்பாடினர்.

எழுத்தாளர், சட்டத்தரணி பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசாவின் ஒருங்கிணைப்பில் நடந்த இவ்விழாவில், முருகபூபதியின் தன்னார்வத் தொண்டுப்பணிகள், மற்றும் இலக்கியப்பணிகள் உட்பட படைப்பு முயற்சிகள் தொடர்பாக திருமதிகள் சாந்தி சிவகுமார், கலாதேவி பால சண்முகன், எழுத்தாளர்கள் சங்கர சுப்பிரமணியன், ஜே.கே. ஜெயக்குமாரன், பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசா, நொயல் நடேசன், கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர், சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், மருத்துவர் நளிமுடீன், மற்றும் திரு. ரத்தினசபாபதி ஐயர் ஆகியோர் உரையாற்றினர்.

சட்டத்தரணி மரியம் நளிமுடீன் சங்கத்தின் சார்பில் முருகபூபதிக்கு பாராட்டு விருது வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் முருகபூபதி தனது ஏற்புரையை நிகழ்த்தினார்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.