இலக்கியச்சோலை

“இணையிலான் 2“ நூல் சிட்னியில் வெளியீடு! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

ஈழத்தின் தொன்மையான வரலாற்றை சொல்லும் சரித்திரப் புனை நாவலான, ‘இணுவிலான்’ சிகாகோ பாஸ்கர் எழுதிய “இணையிலான்” இரண்டாவது
பாகம் சிட்னியில் வெளி வருகின்றது.
ஜனவரி மாதம் எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமை வென்ற்வேத்வில் சமூக நிலையத்தில் (Wentworthville Community Centre, Wentworthville, Sydney) மாலை 1530 மணிக்கு இணுவில் ஒன்றிய ஆதரவுடன் வெளியிடப்பட உள்ளது.
இணுவிலானின் இணையிலான் :
ஈழத்தின் வரலாற்றுப் பின்னணியில் புதைந்து கிடக்கும் சரித்திரத்தை அயராது அலசி தம் நூலில், அழுத்தமான அடித்தளத்தை பதிவு செய்திருக்கிறார் ‘இணுவிலான்’ எனப்படும் சிகாகோ பாஸ்கர்.
இலங்கையைக் கைப்பற்றி 1508 முதல் 1658 வரை ஆண்ட போர்த்துக்கீசர் வரலாறோடு நிறைவான “இணையிலான் 2”நூலின்
தொடர்ச்சியாக, அடுத்த வரலாற்று நாவல் “இணையிலான் 2“ தற்போது வெளிவருகிறது. இலங்கையைக் கைப்பற்றி 1658 ம் ஆண்டு முதல் 1796 வரை ஆண்ட ஒல்லாந்தர்(டச்) மற்றும் 1796/1815 ம் ஆண்டு முதல் 1948 வரை
இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் அன்னியரை எதிர்த்துப் போரிட்ட பண்டார வன்னியனின் வரலாற்றைத் தழுவி வரும் “இணையிலான்” இரண்டாவது
பாகம் ஈழத்தின் தொன்மையான வரலாற்றை சொல்லும் நூலாகும்.
ஈழத்தின் ஆழத்தை காண முயன்ற இந்த முயற்சியில் நூலாசிரியர், வணங்கா மண்ணான வன்னி மண்ணில் அடங்கா தமிழனாக விளங்கிய
மாவீரன் பண்டார வன்னியன் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அள்ளித் தந்துள்ளார்.
போர்த்துக்கீசர் அன்று செய்த மத மாற்றமும், அதன் பின் விளைவுகளும், ஆலயங்களின் அழிவும், மக்களின் அவல நிலையை ஆழ்ந்து, ஆராய்ந்து ஒரு சரித்திர கதையை தீட்டி பிரமிக்க வைத்துள்ளார் நூலாசிரியர் ‘இணுவிலான்’ சிகாகோ பாஸ்கர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாண இராச்சியத்தை தமிழ் மன்னர்கள் ஆண்டு இருக்கிறார்கள் என்பதை பல சான்றுகளுடன் கதையில் சொல்லி, கடலில் மூழ்கி எழுந்து முத்தெடுத்ததுப் போல்
இணையிலான் புனை நாவலை இனிதாக உருவாக்கி இருக்கிறார் நூலாசிரியர்.
எங்கள் சொந்த தாய் மண்ணின் வரலாற்றை அறிய ஆவலாய் இருக்கும் வாசகர்களுக்கு “இணையிலான்” இரண்டாவது பாகம் விரைவில் வருகின்றமை அரிய வரப்பிரசாதமாகும்.
நூலாசிரியர் ‘இணுவிலான்’ சிகாகோ பாஸகர் பிறந்த மண்ணை விட்டு பிரிந்து பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ் மீதும், மண் மீதும் கொண்ட தீராக்காதலால் மட்டுமே இப்படியொரு வரலாற்று நாவலை படைக்க முடிந்ததுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.