இலக்கியச்சோலை

கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள்…. கதறி அழுத சிவாஜி, டி.எம்.எஸ், எம்.எஸ். விஸ்வநாதன்….அப்படி என்ன பாட்டு?

1981 ஆம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் கல்தூண். சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

வசந்த மாளிகையில் தனது வரிகள் மூலம் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய கவியரசர் கண்ணதாசன், தனது பாடல் மூலம் பலரையும் அழ வைத்துள்ள நிலையில், தான் எழுதிய பாடல் பதிவின்போது தன்னுடன் சேர்ந்து, எம்.எஸ்.வி, பாடகர் டி.எம்.எஸ் என பலரையும் அழ வைத்துள்ளார்.

இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த மூன்று பாடல்களையுமே கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படம் பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கிராமத்தில் மதிக்கத்தக்க விவசாயியாக வலம் வரும் சிவாஜி கணேசனின் மனைவி கே.ஆர். விஜயா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இதில் ஒரு மகன் வாய் திக்கி திக்கி பேசும் நிலையில், மற்றொரு மகன், தான் நன்றாக இருக்கிறோம் என்ற ஆணவத்தில் யாரையும் மதிக்காமல் இருந்து வருகிறார். மேலும் பட்டணத்திற்கு படிக்க போன அவர், பெண்கள் தொடர்பு மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார்.

கிராமத்திற்கு வந்த பிறகும், இதே நிலை தொடர்வதால் இதை கண்டுபிடித்த சிவாஜி கணேசன் மகனை தண்டிக்க, அவன் இனிமேல் உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. உங்களை இந்த ஊரில் அசிங்கப்படுத்துகிறேன் என்று அதற்கான வேலையை தொடங்குகிறார். இதனால் மன வேதனையில் இருக்கும் சிவாஜி கணேசன் மனம் வருந்தி பாடும் பாடல் தான் ‘’வளர்த்த கிடா முட்ட வந்தா’’ என்ற பாடல்.

இரண்டு மகன்களை பெற்ற ஒரு தந்தையின் நிலையில் இருந்து கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலை எழுதும்போதே கவியரசர் கண்ணதாசன் அழுதுள்ளார். அதன்பிறகு இந்த பாடலுக்கு பின்னணி இசைமைத்த எம்.எஸ். விஸ்வநாதனும் அழுத நிலையில், பாடல் பாடிய டி.எம்.எஸ் இறுதியில் ஒரே வரியை மூன்று விதமான குரலில் பாடி அழுதுள்ளார். நடிக்கும்போது சிவாஜியும் அழுதுள்ளார்.

இந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவியரசர் கண்ணதாசன் தனது பாடல் மூலம் பலரையும் அழ வைத்திருந்தாலும் ஒரே பாடலுக்காக இசையமைப்பாளர் நடிகர், பாடகர், என பலரையும் அழ வைத்தது மட்டுமல்லாமல் இந்த பாடலை எழுதும் போது தானும் அழுதுள்ளார்.

சென்சார் போர்டையே திணறடித்த

கவிஞரின் வரிகள்…!

 

தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டாராம். இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது.

பாசமலர்.

இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

இந்தப் பாடலில் மணமகளுக்கு அறிவுரை சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். சிவாஜியின் தங்கை சாவித்திரி தான் மணமகள். இந்தப் பாடலுக்கு தலைமை தோழியாக வருபவர் சுகுமாரி. இவர் தான் படத்தில் பாடுவதாக அமைக்கப்பட்டு இருக்கும். கருவறை தொடங்கி கல்லறை வரை நம் வாழ்க்கையோடு ஒன்றாக வருவது கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் தான்.

முதல் இரவுக்கு முன்ப முன் ஒருதோழியின் குறும்பு கலந்த குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி வெகு அழகாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடலைப் பார்க்கும்போது நாமே திருமண வீட்டிற்குள் இருந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். பெண்ணை அழைக்கும் போது எல்லோரது திருமண வீட்டிலும் இந்தப் பாடல் நிச்சயமாக ஒலிக்கும். அதுதான் வாராய் என் தோழி வாராயோ… என்ற பாடல்.

பாடலுக்கு இடையே புரோகிதர் மந்திரங்களை உச்சரிப்பது அருமை. படத்தில் மணமகனாக வருபவர் ஜெமினிகணேசன். இந்தப் பாடலுக்கு இசைக்கோர்வையைச் செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலில் நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு முத்தாய்ப்பு.

மணக்கோலம் கொண்ட மகளே… புதுமாக்கோலம் போடும் மயிலே… குலக்கோலம் கொண்ட கனியேநம் குலம் வாழப் பாடு மயிலே… சிரிக்காத வாயும் சிரிக்காதோ… திருநாளைக் கண்டு மகிழாதோ… என அழகான வரிகளைப் போட்டுள்ளார் கவியரசர். இந்தப்பாடலுக்கு இடையே தோழிகள் நய்யாண்டி பண்ணி சிரிக்கும் விதம் அருமையாக இருக்கும்.

திருமணத்திற்கு அழைக்கும்போது மணமகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைக் குறும்பாகத் தோழிகள் சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். இது காலம் கடந்தும் நிற்கும் பாடல். கொஞ்சம் கொஞ்சமாக பாடல் தாம்பத்தியத்திற்குள் போகும். அப்போது எழிலான கூந்தல் கலையாதோ, இதமான இன்பம் வளராதோ என அருமையாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

கடைசி வரிகளைப் பாருங்கள். மலராத பெண்மை மலரும். முன்பு தெரியாத உண்மை தெரியும். மயங்காத கண்கள் மயங்கும். முன்பு விளங்காத கேள்வி விளங்கும். இதை விட கண்ணியமாக எந்தக் கவிஞராலும் சொல்ல முடியாது. தொடர்ந்து வரும் வரிகள் முத்தாய்ப்பானவை. இரவோடு நெஞ்சம் உருகாதோ, இரண்டோடு மூன்றும் வளராதோ… இதுவல்லவோ பாடல் என்று நம்மை வியக்க வைக்கிறது.

.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.