“பாலஸ்தீனம் – எரியும் தேசம்” நூல் வெளியீடு: – ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஜீவநதி பதிப்பகத்தின் 299 ஆவது வெளியீடாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய “பாலஸ்தீனம் – எரியும் தேசம்” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகி உள்ளது.
இந்நூலில் நிகழ்கால பாலஸ்தீன போர்க்கள நிகழ்வுகளின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
‘ஜீவநதி’ பதிப்பகத்தால் வெளியான இந்நூலில் நூறாண்டுகளாக தொடரும் துயரத்தை சுமந்த எரிகின்ற பாலஸ்தீன தேசம் பற்றிய வரலாற்றுப் பார்வையில் கட்டுரைகள் இந்நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலம் அறிமுகமான ஐங்கரன் விக்கினேஸ்வரா நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர். சார்ள்ஸ், நவீனன் எனும் புனைபெயர்களாலும் அறியப்பட்ட
இவரது படைப்புகள் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
தற்போது வெளியாகியுள்ள “பாலஸ்தீனம் எரியும் தேசம்”கட்டுரைத் தொகுப்பு நூலானது பாலஸ்தீன மக்கள் மிகவும் நெருக்கடியான காலத்தில் இனப்படுகொலை ஒன்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.