இலக்கியச்சோலை
வீடு ஜப்திக்கு வந்த போது வீட்டுக்கு வெளியே வருகிறார் சாவித்ரி!
அந்த ஏழு நாட்கள் படத்தில் நடித்து கொண்டிருந்த போது படப்பிடிப்பு தளத்திற்கு அருகே சாவித்ரி அம்மாவின் வீடு இருந்தது.
எனவே, அவரை பார்க்க சென்றேன். வீட்டின் வேலைக்காரி ஜெமினி சாரிடம் போன் செய்து ஏதோ சொல்ல, அவர் என்னை அனுமதிக்க சொன்னார். சாவித்ரியின் மகன் அவனுக்கு அப்போது 10 அல்லது 13 வயது இருக்கும்.
என்னை சோகமாக பார்த்தான். உள்ளே சென்று சாவித்ரி அம்மாவை பார்த்தேன்.
என் வாழ்வில் அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்ததே இல்லை. அதை என்னால் வார்த்தையால் விவரிக்கவே முடியாது. அதை சொல்லவும் கூடாது.
ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து இது யார் என கண்டுபிடிக்க சொன்னால் கூட யாராலும் அது சாவித்ரி அம்மா என கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருந்தார். அவர் ஜெமினியை காதலித்திருக்கவே கூடாது என்பது என் எண்ணம்.
அவ்வளவு தான தர்மங்கள் செய்தார். அவரின் பணம் போய், எல்லாரும் ஏமாற்றி வீடு ஜப்திக்கு வந்த போது வீட்டுக்கு வெளியே வருகிறார். அங்கு அவரின் டிரைவர் நிற்கிறார். அவரிடம் கார் சாவியையும், காருக்கான ஆவணங்களையும் கொடுத்து இதை வைத்து பிழைத்து கொள் என கூறிவிட்டு சென்றார். அவருக்கா அந்த நிலை’ என்பதை நினைக்கும் போது
என் கண்கள் தானாகவே கலங்கி விடுகிறது
நடிகர் ராஜேஷ்!
முகநூல் பதிவு: பிரசாந்த்.