கவிதைகள்
எது எவரை தீர்மானிக்கிறது / எவர் எதை தீர்மானிக்கிறார்?… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
கற்றவர் எல்லாம் அறிவாளியா
கல்லாதவர் எல்லாம் மூடரா போர்புரிபவர் எல்லாம் போராளியா போர்புரியாதவர் எல்லாம் கோழையா பேசத்தெரிந்தவர் எல்லாம் பேச்சாளரா பேசத்தெரியாதவர் பேச்சாளரில்லையா கற்றுக் கொடுத்தால்தான் ஆசானா கற்றுத் தராவிடில் ஆசானில்லையா நடிப்பவர் எல்லாம் நடிகரா நடிகரல்லாதவர் நடிப்பதில்லையா எழுதுபவர் எல்லாம் எழுத்தாளரா எழுத்தாளரால் மட்டுமே எழுதமுடியுமா பாடுபவர் எல்லாம் பாடகரா பாடகரில்லை என்றால் பாடக்கூடாதா காவியுடுத்துபவர் எல்லாம் துறவியா துறவியெல்லாம் காவி உடுத்துகிறார்களா ஆலயம் செல்பவர் எல்லாம் ஆன்மிகவாதியா ஆலயம் செல்லாதவன் எல்லாம் நாத்திகனா விருதுபெறுபவர் எல்லாம் சிறந்தவரா விருதுபெறாவர் எல்லாம் சிறப்பற்றவரா விருதுபெற்றவை எல்லாம் உயர்ந்தவையா விருதுபெறாதவை எல்லாம் தாழ்ந்தவையா இங்கு எது எதை தீர்மானிக்கிறது? இங்கே எவர் எவரை தீர்மானிக்கிறார்? ஏன் இக்கேள்வி என்னுள் எழுகிறது? அன்றொரு நாள் அங்கே ஒரு போட்டி கண்டேன் அடுத்த நாள் அப்போட்டியில் பலர் போட்டி போடக்கண்டேன் இன்றுவரை பல விருதுபெற்றோர் அவ்விருதை பெறவுமில்லை அது என்னவென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை அன்றொரு நாள் அங்கே ஒரு போட்டி கண்டேன் பலர் போட்டி போடக்கண்டேன்.-சங்கர சுப்பிரமணியன்.