கவிதைகள்
எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதி அவர்களுக்கு பாராட்டு கவிமாலை! … சங்கர சுப்பிரமணியன்.
வள்ளுவன் சொன்னான் செவிக்குணவு
இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று இங்கு நான் செவிக்கு மட்டும் உணவாக சொற்களை மலர்களாக்கி ஒரு கூடை கொண்டு வந்துள்ளேன் கவிமாலை தொடுக்க மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தாதபோது கவிமாலை ஒன்றை சூட்டி மகிழ்ந்திடுவேன் அலராத மலர்களாம் அன்னைத் தமிழ் வரிகள்கொண்டு ஆக்குவித்த மாலைதன்னை ஏற்புடையதாக்கியன்றோ இவர்க்கிங்கு சூட்டுகின்றேன் ஏற்றிடுவீர் என்னருமைத் தோழரே பொருள் கொடுத்து வாங்கிவந்த பூமாலை இதுவன்று அருள் கொண்ட மனத்தினர் உம் திரள் மிக்க படைப்பு கண்டு திரளும் மாந்தர் கூட்டத்திலே மருளும் உம் மாண்புதன்னை வகையாய் தொடுத்தெடுத்த மிகையிலா கவிமாலையிது தகையுடை தளத்து நிற்கும் தென்பொதிகைத் தமிழ்தனை தன்வசமாக்கி இங்கு தடையின்றி நூலாக்கும் தகைமைக்கு சிகரமாய் தனிக்கவிதை மாலையிது பட்டுப் புழுக்கள் கொன்று கட்டுடனே பட்டுநெய்து மின்னும் வனப்புகொண்ட பொன்னாடை இதுவன்று மேனிதனை அலங்கரிக்க நானிதனை போர்த்தவில்லை ஏனிதனை போர்த்துகிறேன் என்பதனை சொல்லுகின்றேன் உயிரை நான் கொல்லவில்லை உயிரணைய சொற்கள் வென்றேன் வரிகளால் ஆடைபின்னி வார்த்தைகளை மின்னும் தங்கக் கரையாக்கி மிளிர்வதுபோல் நான்காணும் இப்பாமாலையை பொன்னாடையாக்கி போர்த்திடுவேன் நானிங்கு பாமரனாய் மகிழ்ந்து போவதற்கே இதோ என் கவிமாலை. இக்கவிமாலை திரை இசையுடன் கலந்து பாடலாக தேனாக செவிகளில் பாயட்டும். இளையராஜாவின் பாடலான வழிநெடுக காட்டுமல்லி யாருமத பாக்கலியேஎன்ற பாடலின் இசையைமட்டும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு வான்கோழி என்பதால் பொல்லாச்சிறகை விரித்தாடுகிறேன். பாரதி சொன்னான் என்பதற்காக இந்த பாமரன்பால் ரௌத்திரம் பழகாதீர். ரௌத்திரத்தின் மேல் வௌவல் கொண்டால் கரங்களுக்கு மடைமாற்றி கரவொலியாக்கிடுவீர். இதோ கவிமாலை! பூபாளம் அதிகாலை ராகம் பூபதி எழுத்துல ஒருவேகம் இலக்கியமதிலே தனி மோகம் இலக்கது ஒன்றே இவர் தாகம் இலக்கியம் மலருது எழுதயில இலக்கு தெரியுது படிக்கயிலே பூபாளம் அதிகாலை ராகம் பூபாளம் அதிகாலை ராகம் பூபதி எழுத்தும் சிறப்பாகும் எழுத்தே இங்கு கதசொல்லும் எழுதுவதெல்லாம் மெய்யாகும் பொய்யென எதுவும் அதிலில்ல புரிந்தேன் நான் அத உண்மயில பூபாளம் அதிகாலை ராகம் படைப்பதுவே இவர் பழக்கம் சிறப்பாய் அதுவே வந்துவிடும் நடப்பதயிங்கு இவர் சொல்லுவார் படைப்பும் அதுவே போலிருக்கும் படிப்பதை இவரும் பகிர்ந்திடுவார் நொடி பொழுதுமதை இவர் மறவார் மறந்தத சொல்லவும் மறுப்பதில்ல நடந்தத சொல்வதில் தயக்கமில்ல வாழ்விலே நானும் கண்டதில வழிதெரியும் இவர் நூலினில பூபாளம் அதிகாலை ராகம் பூபதி எழுத்தும் சிறப்பாகும் இலக்கியம் மலருது எழுதயில இலக்கு தெரியுது படிக்கயிலே எழுதுகின்ற நேரத்துல இரவுபகல் பார்ப்பதில்ல எழுத்திருக்க உள்ளத்துல நித்திரையும் வந்ததில்ல படைக்க இவருக்கு பலவிருக்க பயனற்று இவரும் இருந்ததில்ல பயன்பெறவே இங்கு பலரிருக்க பயனின்றி இருந்திட மாட்டாரே சொல்ல மறந்த கதையதுதான் சொல்லிமுடித்த கதையதுதான் பூபாளம் அதிகாலை ராகம் பூபதி எழுத்தும் சிறப்பாகும் இலக்கியமதிலே தனி மோகம் இலக்கது ஒன்றே இவர் தாகம் பொய்யென எதுவும் அதிலில்ல புரிந்தேன் நானத உண்மயில பூபாளம் அதிகாலை ராகம்.
சங்கர சுப்பிரமணியன்.
என்மீதுள்ள அன்பினாலும் அபிமானத்தினாலும் இலக்கிய சகோதரர் திருமிகு சங்கர சுப்பிரமணியன் வாழ்த்துப் பாமாலை இயற்றிப்படைத்துள்ளார்.
என்னை எனது எழுத்துப்பணிகளின் ஊடாக இனம் கண்டு வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்.
என்றும் அன்புடன்
முருகபூபதி
மிக்க நன்றி, அன்பரே.