கவிதைகள்
எது மனதை உலுக்கி உண்மைபேசும்? … கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
வள்ளுவன் எழுதினான்
வாழ்வின் நெறி உரைக்க பாரதி எழுதினான் வாழ்வின் பொருள் உரைக்க கம்பன் எழுதினான் காதலை வெளிப்படுத்த கண்ணதாசன் எழுதினான் காதலின் ஆழமதை எடுத்துரைக்க கவிஞரெல்லாம் எழுதினார்கள் கற்பனைச் சிறகை பறக்கவிட கட்டுரைகள் படைத்தார்கள் பலர் கண்களைத் திறந்திடவே கதைகளையும் தந்தார்கள் கனவுலகில் வாழ்ந்து மகிழ கருத்தினில் உதித்தவை யாவுமே எழுத்துரு கொண்டு உலவினாலும் காவியமாய் இங்கு நிற்பவையோ காலத்தால் அழியாது நிற்பவையே உருவாக்கப்பட்டு உலாவருபவற்றுள் ஒரு சதம் கூட நிற்பதில்லை என்பேன் இருப்பினும் படைக்கின்றார் நூலாக்கி அகமதிலே மகிழ்கின்றார் அலமாரியில் அடுக்கி அற்புதமென்கின்றார் ஏட்டுச் சுரைக்காய் கறி(தை)க்கு உதவாதென்பது போல் படைப்பில் பலவிங்கு ஏட்டுச்சுரைக்காயே நெஞ்சில் பதியும் வகை படைத்திடுவீர் பல படைத்து பகட்டு காட்டமுற்படாது சில படைத்தாலும் சிந்தையிலே நிற்பீர் எவரொருவரன் எழுத்தை தேடிப்பிடிப்பாரோ எந்த படைப்பை படித்து மகிழ்வாரோ எப்படைப்பு யதார்த்தத்தை உணர்த்திடுமோ எது மனதை உலுக்கி உண்மை பேசுமோ அதை மட்டும் நற்படைப்பென்பர் மற்றதை எழுத்துருவில் வந்த குப்பை என்பர்!-சங்கர சுப்பிரமணியன்.