கரிணி அவர்களின் “வைகல்” நூல் வெளியீட்டு விழா! … ஏலையா க.முருகதாசன்.
24.09.23 அன்று ஜேர்மனி டோட்முண்ட் நகரிலுள்ள தமிழர் அரங்கம் மண்டபத்தில் கரிணி எழுதிய வைகல் என்ற வெளியீட்டு இடம்பெற்றிருந்தது.
மக்களின் வாழ்வியலை ஒழுங்கமைக்கின்ற அறிவுரைகளையும்,மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சொல்லுகின்ற 31 கட்டுரைகளைக் கொண்ட நூலான இந்நூல் வெற்றிமணி சஞ்சிகையின் 28வது நூலாக மண்டபம் நிறைந்த சபையோர் மத்தியில் அரங்கேறியது.
இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளில் பெரும்பாலானவை வெற்றிமணிப் பத்திரிகையில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகளாகும்.
நூலாய்வினை,நூலாசிரியருக்கு சிறுவயதில் படிப்பித்தகௌரி ஜெயகுமார் ஆசிரியர் மேற்கொண்டிருந்தார்.பல கலைஞர்களினதும் எழுத்தாளர்களினதும் வாழ்த்துரைகள் இடம்பெற்றிருந்தன.
வெற்றிமணி ஆசிரியர் எழுதி இயக்கித் தயாரித்த எழுதாத கவிதைக்கு முதல் பரிசு என்ற குறும்பட கரிணியின் விழா இனிதே நிறைவு பெற்றது.
நூலாசிரியருக்கும் வெற்றிமணிப் பத்திரிகை ஆசிரியர் கலாநிதி மு.க.சு சிவகுமாரன் அவர்களுக்கும் பாராட்டினையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.
ஆன்மீகக் கருத்துக்களையும் நன்னெறிக் கருத்தக்களையும் தன்னகத்தே கொண்டு அதனை புலம்பெயர் நாடொன்றில் நூலாக வெளியிட்ட கரிணி அவர்களின் இம்முயற்சியினைப் பாராட்டுவதுpல் மகிழ்;ச்சியடைகிறேன் தரமான ஒரு நுர்லுக்கு தரமான விழாவெடுத்து கொண்டாடியது பெருமையிலும் பெருமை.
ஏலையா க.முருகதாசன்.